
Vijay Tour Plan: விஜய் பேரணிக்கு போலீஸ் அனுமதி
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி மரக்கடையில் பேசுவதற்கு திருச்சி மாவட்ட காவல் துறை 23 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த், திருச்சி மாவட்ட நிர்வாகி கரிகாலன் இருவரும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்கிறேன் என எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தவுடன், அனுமதி கடிதத்தை காவல் துறை துணை ஆணையர் சிபின் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9.30 மணி அளவில் மரக்கடை பகுதிக்கு தொண்டர்களை வரவழைத்து இருக்க வேண்டும். விஜய் வரும்போது அவருடைய வாகனத்துக்கு முன் பின் 5 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என காவல் துறை தரப்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து, மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் அனைத்தும் தவெகவினரே செய்து கொள்ள வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளை அழைத்து வரக்கூடாது, பொதுமக்கள் யாருக்கும் போக்குவரத்தில் இடையூறு செய்யக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது
0 Comments